தமிழகத்தில் இன்று 5,017 பேருக்கு கொரோனா ; 5,548 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
5,017 people in Tamil Nadu today Corona; 5,548 discharged
6/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,017 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நாளில் 5,548 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 5,017 பேருக்கு
கொரோனா கண்டறியப்பட்டது. இதில், 5,014 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,30,408 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 189 ஆய்வகங்களில் 81,128 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 78 லட்சத்து 63 ஆயிரத்து 864 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,088 பேர் ஆண்கள். 1,929 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,80,629. பெண்களின் எண்ணிக்கை 2,49,748. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31 .
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,548 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 212 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 71 பேர் இறந்தனர். இவர்களில் 41 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 30 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,917 ஆகும். தற்போது 45,279 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் இன்று மட்டும் 1,306 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் மொத்தம் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர இன்று கோவையில் 434 பேருக்கும், சேலத்தில் 326 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 263 பேருக்கும், தஞ்சாவூரில் 224 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 156 பேருக்கும், திருப்பூரில் 152 பேருக்கும், நாமக்கலில் 146 பேருக்கும், கடலூரில் 145 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் 17 பேருக்கும்,தென்காசியில் 13 பேருக்கும் தூத்துக்குடி 35 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் 25 பேரும், சேலத்தில் 9 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், திருப்பூர், வேலூரில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், நாமக்கல், தேனியில் தலா 2 பேரும், அரியலூர், கோவை, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 947 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் இதுவரை மொத்தம் 1,59,237 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் 494 பேரும், சேலத்தில் 372 பேரும், செங்கல்பட்டில் 357 பேரும், தஞ்சாவூரில் 344 பேரும், கடலூரில் 276 பேரும், திருப்பூரில் 254 பேரும், திருவள்ளூரில் 207 பேரும், திருவண்ணாமலையில் 174 பேரும், திருவாரூரில் 165 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.