June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகம்

1 min read

24 fake universities in India

7/10/2020

இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைகழகங்கள் இயங்கி வருவதாக பல்கலை மானிய குழு (யூ.ஜி.சி.,) தெரிவித்து உள்ளது.

இது குறித்து யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கூறி இருப்பதாவது:-


பல்கலைக்கழகம்

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கிகரீக்கப்படாத பல்கலைகழகங்களின் பட்டியலை யூ.ஜி.சி. வெளியிட்டுள்ளது. அதில் யூ.ஜி.சி.யின் விதி முறைகளை கடைபிடிக்காத பல்கலைகழகங்கள் என 24 பல்கலைகழங்கள் இயங்கி வருகின்றன. இவை போலி பல்கலை என பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த பல்கலை கழகங்கள் எந்த ஒரு பட்டத்தையும் வழங்க அதிகாரம் கிடையாது.
போலி பல்கலைகழகங்கள் உள்ள மாநிலங்கள் வாரியான பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் பிடிக்கிறது. இந்த மாநிலத்தில் 8 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.
இதற்கு அடுத்த படியாக டெல்லியில் 7, மேற்கு வங்காளம் , ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 2பல்கலைக்கழங்களும், கர்நாடகம் , கேரளா, மராட்டியம், புதுச்சேரி, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகமும் இயங்கி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.