அ.தி.மு.க.வில் குழப்பம் தீர்ந்தது; முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி
1 min read
The confusion in the ADMK was resolved; First-Ministerial Candidate Edappadi Palanisamy
7-/10/2020
அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படடு விட்டார். இதனால் கட்சிக்குள் நிலவி வந்த குழப்பம் நீங்கியது.
முதல்-அமைச்சர் வேட்பாளர்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்துவந்தாலும் அடுத்த தேர்தலில் யாரை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதில் கட்சிக்குள் குழப்பம் நிலவியது. அதாவது முதல்-அமைச்சர் பழனிசாமியே அடுத்த முதல்வர் வேட்பாளராக தொடரவேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். அதேநேரம் துணை முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.
இருதரப்பினரும் அவர்களின் ஆதரவாளர்களுக்காக போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட அ.தி.மு.க.வின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதிலும் மோதல் வெடித்தது. ஒருமித்த கருத்து எட்டப்படவில்ல.
இதனால் இன்று (புதன்கிழமை) முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏ.க்களுடனும் தனித்தனி அணியாக உருவாகி ஆலோசனை நடத்தினர். மேலும், அமைச்சர்களும் இருவருடனும் மாறி மாறி ஆலோசனை நடத்தினர்.
அறிவிப்பு
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில் அதிமுக.வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தார்.
வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி., கோபால கிருஷ்ணன், மாணிக்கம் (சோழவந்தான் எம்எல்ஏ), முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக பழனிசாமி அறிவித்தார்.
இந்தக்குழுவின் தலைவராக பன்னீர்செல்வம் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், எடப்பாடி பழனிசாமி தான் வரக்கூடிய தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக.வின் முதல்-அமைச்சர் வேட்பாளர் என அக்கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு, பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஆதாயம் தேட முயன்ற எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து விட்டதாகவும் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக இருப்பதாவும் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடினர்.
பாரதீய ஜனதா
ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அது இல்லாத பட்சத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததது. ஆனர் கோரிக்கையும் எடுபடாத நிலையில் வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதுதான் தற்போது நிறைவேறி இருக்கிறது. இந்த வழிகாட்டு குழுவில் 6 பேர் எடப்பாடி பழனிசாமிஆதரவாளர்கள் என்றும் 5 பேர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.
இப்போது நிகழ்ந்துள்ள சுமூக தீர்வுக்கு பாரதீய ஜனதா மேலிடத்தின் அழுத்தம்தான் காரணம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.