July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவுக்கான பிரிட்டன் ஒருநாள் தூதரக அதிகாரி 18 வயது பெண்

1 min read

oneday British Consular Officer to India 18 year old Girl

11/10/2020

இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரியாக டெல்லியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை ஒரு நாள் பணியாற்ற அனுமதித்து கவுரவித்துள்ளனர்.

போட்டி

பிரிட்டன் தூதரகம் 2017 முதல் “ஒரு நாள் தூதரக உயர் ஆணையாளர்” என்ற போட்டியை ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த11-ந் தேதி சர்வதேச பெண்கள், குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
இந்தப்போட்டியில் 18 முதல் 23 வயது வரையிலான இந்திய பெண்களை இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். இதன் மூலம் தங்களின் மிக மூத்த அதிகார பதவியான. தூதரக உயர் ஆணையர் பதவியை ஏற்க ஒரு நாள் அனுமதிக்கின்றனர்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உலகளவில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம்.

சைதன்யா

இந்த ஆண்டு போட்டிக்காக, கொரோனா சமயத்தில் பாலின சமத்துவத்திற்கான உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை பற்றி ஒரு நிமிட வீடியோவை சமர்பிக்கும் படி கேட்டிருந்தனர். அதன் மூலம் புது டில்லியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி சைதன்யா வெங்கடேஸ்வரன் பிரிட்டன் தூதரக உயர் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியின் மூலம் தூதரக அதிகாரியாகும் 4-வது பெண் இவர் ஆவார்.

இவர் கடந்த புதன் கிழமை ஒரு நாள் தூதரக அதிகாரியாக பதவியேற்றார். இவர் தூதரக துறை தலைவர்களுக்கு பணிகளை ஒதுக்கினார். மூத்த பெண் காவல்துறை அதிகாரிகளுடன் உரையாடுவது, பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்டெம் உதவித் தொகை திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வது போன்ற பணிகளை அவர் செய்தார் என பிரிட்டன் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.