கர்நாடகாவில் கொரோனா பீதியால் 30-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
1 min read
School holidays in Karnataka due to Corona panic till 30th
11/10/2020
கர்நாடகத்தில் கொரோன பரவல் காரணமாக பள்ளிகளுக்கு வரும் 12-ந் தேதி முதல் 30 ம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:-
விடுமுறை
மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்றால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் மூலம் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இரு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு வரும் 12-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு முன் கூட்டிய தசரா வாழ்த்துக்கள்.
இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
ரத்து
முன்னதாக கர்நாடக மாநில அரசு அக்டோபர் 3 முதல் 26-ந் தேதி வரை திட்டமிடப்பட்ட விடுமுறையை ரத்து செய்திருந்தது. இதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.