எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் தகனம்
1 min read
Edappadi Palanisamy’s mother’s body cremated
13/10/2020
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93). அவர் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார். தாயார் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார்.
தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.