பணம் பறிக்கும் கட்சிகளை தடுக்க நீதிபதிகள் உத்தரவு
1 min read
Judges ordered to prevent money laundering parties
14/10/2020
பணம் பறிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட கட்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு
தஞ்சாவூரை சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேசன், மதுரை ஐகோர்ட்டு ஒரு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், திருச்சியில் இயங்கி வரும் ஆக்சிஜன் காஸ் நிறுவனத்தை மூட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தும், தமிழ்நேசனுக்கு கண்டனம் தெரிவித்தனர்
மேலும் நீதிபதிகள் கூறியதாவது:-
மனுதாரரின் கட்சி அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25 ஆயிரம் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதிக்க வேண்டும். லெட்டர்பேட் கட்சிகளால் மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
பணம் பறிக்கும் நோக்கம்
தமிழகத்தில், அங்கீகரிக்கப்படாத சில லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன. இத்தகைய கட்சிகளை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்சி தொடங்க எதன் அடிப்படையில் தேர்தல் அனுமதி வழங்குகிறது
இவ்வாறு எனக்கேள்வி எழுப்பிய நீதிபதிகள் எதிர்மனுதாரராக தேர்தல் ஆணையம், உள்துறை, சட்டத்துறை சேர்த்தும், அவர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.