செவ்வாய் கிரகத்தை இன்று வெறும் கண்ணில் பார்க்கலாம்
1 min read
Mars can be seen with the naked eye today
14/10/2020
செவ்வாய்க்கிரகத்தை இன்று ( புதன்க கிழமை )வெறும் கண்களால் பார்க்கலாம்.
செவ்வாய்க்கிரகம்
சூரியனை சுற்றும் கிரகங்களில் வெள்ளிக் கிரகத்தை ( சுக்கிரன்) வெறும் கண்களால் பார்க்கலாம். ஆனால் சிவப்பு நிறமுடைய செவ்வாய் கிரகத்தை எப்போதாவது வெறும் கண்களால் பார்க்க முடிவும். அந்த அரிய நிகழ்வு அதாவது செவ்வாய்க்கிரகத்தை இன்று(புதன்கிழமை) வெறும் கண்ணால் பார்க்கலாம்.
பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கிலோ மீட்டர் ஆகும். இதில் நீள் வட்ட பாதை பயணத்தில் மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது இரு கிரகங்களுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவாக இருக்கும். இந்த நீள்வட்ட பாதை தொலைவு காரணமாகவே பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365 நாட்களும், செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர 687 நாட்களும் ஆகிறது.
இன்று
இதனால் விரைவாக சூரியனை சுற்றி வரும் பூமி 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகத்தை அருகில் சந்திக்கிறது. இதில், அமீரக நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை சுமார் 3.20 மணிக்கு செவ்வாய் கிரகம் வானில் பிரகாசமாக தோன்றும். இன்று பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம். மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால் இம்மாத இறுதிவரை காணலாம். நாட்கள் கடந்து செல்ல செல்ல தொலைவும் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் பார்ப்பதற்கு குறையும்.
பொதுமக்கள் சூரிய மறைவுக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பார்க்கலாம்.