கொரோனா மீண்டும் வந்தால் பாதிப்பு அதிகம் என விஞ்ஞானிகள் தகவல்
1 min read
The risk is greater if the corona comes back
As informed by scientists
14/10/2020
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமான பின் 2-வது முறை வந்தால் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா
அம்மை, காலரா போன்ற தொற்று நோய்கள் ஒருவருக்கு ஒரு முறை வந்துவிட்டால் மீண்டும் வராது. அதேபோல் கொரோனாவும் ஒரு முறை ஒருவருக்கு வந்துவிட்டால் மீண்டும் வராது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
- அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா பற்றி ஆராய்ந்து உள்ளனர். இவர்கள் ஆய்வில் 25 வயதான ஒரு நபரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். அவருக்கு 48 நாள் இடைவெளியில் 2-வது முறை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் இப்போது அவருக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமாகி இருக்கிறது.
“இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் முதல் முறை கொரோனா பாதித்தபோது கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியால், மீண்டும் கொரோனா ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாகும். என்று கூறுகிறார்கள்.
அதே நேரத்தில் இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பெல்ஜியம், நெதர்லாந்து, ஹாங்காங், ஈக்குவடாரிலும் இப்படி இரண்டாவது முறை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், முதல் முறையை விட நோயின் தீவிர தாக்குதலுக்கு ஆளானதாகவும் ஏற்கனவே சில விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.