நடிகர் தவசி புற்று நோயால் அவதி
1 min read
Actor Thavasi suffers from cancer
16/11/2020
நடிகர் தவசி புற்று நோயால் அவதிப்படுகிறார்.
நடிகர் தவசி
சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்தவர் தவசி. இவர் மேலும் பல படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்துள்ளர். ஆனாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் தந்தையாக நடித்து மிகவும் பிரபலமானார். இந்தப்படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்கிற ஒற்றை வசனம் மூலம் பிரபலமானவர்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருகிறார்.
புற்று நோய்
இந்தநிலையில் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு தவசி மற்றும் அவரின் மகன் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரிய மீசையும், தாடியுமாய் கம்பீர குரலுடன் இருப்பது தான் அவரின் அடையாளமே. ஆனால் அவர் தற்போது மொட்டை அடித்து எலும்பும், தோலுமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு சினிமா பிரபலங்கள் உதவுமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.