தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு-ரெட் அலார்ட்
1 min read
Heavy rain in Thoothukudi district – Red Alert
16/11/2020
தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவ மழை
தமிழகத்தில் இப்போது வடகிழக்கு பருவமழை காலமாகும். இதனால் கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை பெய்கிறது.
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் கனமழை கொட்டுகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் இதுவரை 166 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.
கனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) இரவு முதல் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கனமழை வாய்ப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.