கள்ளக்காதல் தகராறில் டி.வி. நடிகர் வெட்டிக்கொக்கொன்ற நண்பர்
1 min read
The television series actor was murdered by a friend.
16/11/2020
கள்ளக்காதல் தகராறில் டி.வி.நடிகரை அவரது நண்பர் வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னயைில் நடந்துள்ளது.
டி.வி.நடிகர்
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பாரிவள்ளல் தெருவில் வசித்தவர் செல்வரத்தினம் (வயது41). இலங்கையைச் சேர்ந்தவரான இவர் சென்னையில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார்.
கொரோனா பயத்தில், இவர் தனது மனைவி, குழந்தைகளை விருதுநகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைத்தார். இவர் மட்டும் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி இருந்து டி.வி. சீரியலில் நடித்து வந்தார்.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.45 மணி அளவில் தனது வீட்டு அருகில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம மனிதன் ஒருவன் அரிவாளுடன் ஆட்டோவில் வந்து அங்கு இறங்கினான். மின்னல் வேகத்தில் அவன் செல்வரத்தினத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். செல்வரத்தினம் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அதே இடத்தில் அவர் துடி,துடித்து பரிதாபமாக இறந்து போனார்.
கொலையாளி தான் வந்த ஆட்டோவில் தப்பிவிட்டார். இந்த படுகொலை சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவுடன் போலீஸ் இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத் போலீஸ் படையுடன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
கள்ளக்காதல்
கள்ளக்காதல் பிரச்சினையால் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
செல்வரத்தினத்திற்கு விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் நண்பராக இருந்தார். இவரும் தன்னடைய மனைவியுடன் சென்னையில் வசித்து வருகிறார். மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நண்பரின் மனைவியுடன் செல்வரத்தினம் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அவர் பலமுறை கண்டித்துள்ளார். நண்பரின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். அந்த நிறுவனத்துக்கு சென்று நண்பரின் மனைவியை செல்வரத்தினம் தனியாக அழைத்து சென்று உல்லாசமாக சுற்றுவாராம்.
இந்த கள்ளக்காதல் பிரச்சினையை மையமாக வைத்து தான், செல்வரத்தினத்தை அவரது நண்பரே ஆட்டோவில் வந்து கொலை செய்து விட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். செல்வரத்தினத்தின் நண்பருடன் மேலும் 3 பேரும் வந்ததாக கூறப்படுகிறது. செல்வரத்தினத்தின் நண்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.