June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க.வில் நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்

1 min read

KP Ramalingam, who was removed from the DMK, joined the Bharatiya Janata Party

21/11/2020

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தார்.

கே.பி.ராமலிங்கம்

தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் மு.க.அழகிரியின் ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்.

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று(சனிக்கிழமை) காலை தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்தார்.
அப்போது, இன்று சென்னை வரும் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார். எனவே, கே.பி.ராமலிங்கம், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இணைந்தார்

இந்த நிலையில் தற்போது முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்.

பாரதீய ஜனதா தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.