தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,428 people in Tamil Nadu today
2/12/2020
தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஓரளவு குறைந்து உள்ளது. கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) 1,428 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,84,747 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 11,733 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,398 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,62,015 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் 10,999 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.