ரஜினி ஜனவரியில் புதிய கட்சி தொடங்குகிறார்; பரபரப்பு பேட்டி
1 min read
ajini launches new party in January; Exciting interview
3/12/2020
ரஜினிகாந்த் அடுத்த மாதம் (ஜனவரி) புதிய கட்சியை தொடங்குகிறார். இதுபற்றி அவர் பரப்பரப்பான தகவல்களை பேட்டியின் போது தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சி தொடங்கப்பபோவதாக அறிவித்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அவர் கட்சித் தொடங்குவாரா என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவரும் தனது உடல்நிலை குறித்தும் அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறினார். இதனால்தான் அவர் அரசியலில் வரமாட்டார் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
அற்புதம், அதிசயம்
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது தனது முடிவை விரைவில் அறிவிப்பேன் எனக் கூறினார்.
அதன்படி இன்று அவர் தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் வருகிற (டிசம்பர்) 31ல் தேதி அறிவிப்பு என பதிவிட்டார் . மேலும் அவர் ஏற்கனவே முன்வைத்த ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதியம்…. நிகழும்!! என குறிப்பிட்டு, #இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல.” என ஹேஷ்டாக்கையும் பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் அந்த அறிவிப்பு ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல ஊர்களில் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பேட்டி
இந்த நிலையில் ரஜினி இன்று சென்னையில் நிருவர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 2017ம் ஆண்டில், அரசியலுக்கு வருவேன் எனக்கூறியிருந்தேன். பார்லிமென்ட் தேர்தலில் முடிவு செய்யவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்குவதற்கு முன்னால் கட்சி ஆரம்பித்து, 234 தொகுதிகளில் போட்டியிடுவேன் என கூறியிருந்தேன்.
மக்கள் மத்தியில் எழுச்சி வரணும். எழுச்சியை உண்டாக்க வேண்டும். அதன் பிறகு தான் கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனாவால் முடியவில்லை.
சிறுநீரக சிகிச்சை
எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது உங்களுக்கு தெரியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், சுற்றுப்பயணம் செல்வது ஆபத்து என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
நான் பிரசாரம் செய்ய முடியும் என சிந்தித்தேன். தமிழக மக்கள் பிரார்த்தனை, வேண்டுதலால் ஒருமுறை உயிர் பிழைத்துவந்தேன். இப்போது, அவர்களுக்காக என் உயிரே போனால் கூட என்னை விட சந்தோஷப்படுபவர் வேறு யாரும் கிடையாது. நான், எப்போதும் கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பேன்.
அரசியல் மாற்றம்
அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். அது காலத்தின் தேவை. அரசியல் மாற்றம் வந்தே ஆக வேண்டும். நிச்சயம் மாற்றம் பிறக்கும். நான் வந்த பிறகு, நான் வெற்றியடைந்தால், மக்களுடைய வெற்றி. நான் தோல்வியடைந்தால் மக்களுடைய தோல்வி. மாற்றத்திற்கு எல்லாரும் துணையாக நிற்க வேண்டும். எல்லாத்தையும் மாற்ற வேண்டும். கடினமாக உழைத்து நம்மால் என்ன முடியுமோ அதை செய்து, எனது பாதையில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அண்ணாத்த படத்தை முடித்து கொடுப்பது என் கடமை. அது முடித்துவிட்டு கட்சி பணியை ஆரம்பிப்பேன்.
ஒவ்வொரு நாட்டுக்கும் தலையெழுத்து உள்ளது . தமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அது நிச்சயம் நடக்கும். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இப்போது இல்லைனா எப்போதும் இல்லை. மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம்.
இவ்வாறு ரஜனிகாந்த் கூறினார்.
நிர்வாகிகள் நியமனம்
ரஜனினி அடுத்த மாதம் (ஜனவரி) புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளார். அந்தக் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினி தெரிவித்தார்.