June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜுன மூர்த்தி பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்

1 min read

Arjuna Murthy, who joined Rajini Party, is expelled from BJP

3/12/2020

ரஜினி கட்சியில் இணைந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி பாரதீய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார்.

ரஜினி கட்சி

ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் டுவிட்டரில் அறிவித்திருந்தார்.

ரஜினி தன்னுடைய அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமனம் செய்து உள்ளார்.

பாரதீய ஜனதா

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி நீண்டகாலமாக முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்துவந்தார். அவரின் நெருங்கிய நட்பு வட்டத்திலும் இருந்துவந்திருக்கிறார். முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர், தி.மு.க-விலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.
முதலில் பாரதீய ஜனதாவின் வர்த்தகப் பிரிவில் பதவி வகித்துவந்தவர். அதன்பின் அக்கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தார்.

நீக்கம்

இந்தநிலையில், ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜுனமூர்த்தி, பாரதீய ஜனதாவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்திருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்திருக்கிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அர்ஜுனமூர்த்தி நீக்கப்படுவதாகவும் பாரதீய ஜனதா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன மூர்த்தியின் மனைவி, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனின் பள்ளித் தோழி ஆவார். டெல்லி, தமிழக பாரதீய ஜனதாவுடன் தலைமையுடன் நெருக்கமாக இருந்த இவர், பல்வேறு தொழில்களையும் நடத்திவருகிறார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் டுவிட்டர் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுனமூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.