June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் பணக்கார பெண்ணாக ரோஷினி நாடார் தேர்வு

1 min read

Roshini Nadar selected as the richest woman in India

4/12/2020

இந்தியாவிலேயே பணக்கார பெண்ணாக எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ரோஷினி நாடார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள். இந்தியாவில் பல பெண்கள் தொழில் நிறுவனங்களை தனியாக ஏற்று நடத்தி வெற்றிபெற்று வருகிறார்கள்.

அப்படி தொழில் நிறுவனங்கள் மூலம் முன்னணியில் உள்ள பெண்கள் பட்டியலை ஹூரன் ஆய்வு நிறுவனம், கொடாக் வெல்த் நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தின.

ரோஷினி நாடார்

இதில் இந்தியாவிலேயே பணக்கார பெண்ணாக எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய சொத்து மதிப்பு ரூ.54 ஆயிரத்து 850 கோடியாக இருக்கிறது. அவர் சமீபத்தில்தான் எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின் அவரது சொத்து மதிப்பு அதிகமாக உயர்ந்துள்ளது.
பணக்கார பெண்கள் பட்டியலில் 2-வது இடத்தை பயோபார்ம் நிறுவனத்தின் தலைவர் கிரன் மசும்தார் பிடித்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.36 ஆயிரத்து 600 கோடி ஆகும்.
3-ம் இடத்தை யு.எஸ்.வி. நிறுவனத் தலைவர் லீனா காந்தி திவாரி பிடித்திருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.21 ஆயிரத்து 340 கோடி ஆகும்.

ராதா வேம்பு

4-ம் இடத்தை ரூ.18 ஆயிரத்து 620 கோடி சொத்துகளுடன் டிவிஸ் லெபரடரி அதிபர் நிலிமா மொடாபாத்ரி பிடித்துள்ளார். 5-வது இடத்தை தமிழகத்தை சேர்ந்த ராதா வேம்பு பெற்றுள்ளார். இவர் சோகோ நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.11 ஆயிரத்து 590 கோடி ஆகும்.

6-வது இடத்தில் ஹரிஸ்டா நெட்வொர்க் நிறுவன தலைவர் ஜெயஸ்ரீ உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.10 ஆயிரத்து 220 கோடி ஆகும்.

7-வது இடத்தில் ரேணு முஞ்சால், 8-வது இடத்தில் மாலிகா சிரயு அமின், 9-வது இடத்தில் அனு அகா மற்றும் மெகர் புதும்ஜி, 10-வது இடத்தை பால்குனி நாயர் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள்.

40 வயதுக்கு கீழ்

40 வயதுக்கு கீழ் உள்ள பெண்களில் பணக்காரர் யார் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் ரோஷினி நாடார் முதலிடத்தை பெற்றிருக்கிறார். அவருக்கு 39 வயதாகிறது.

2-வது இடத்தை நிலிமா மொடாபாத்ரி, 3-வது இடத்தை திவ்யா கோகுல்நாத் பெற்றுள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.