June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,235 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,235 people in Tamil Nadu today

11/12/2020

தமிழகத்தில் இன்றுமட்டும் 1,234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா விவரத்தை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவலகள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) 1,235 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 96 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது.

டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் தற்போது 10,299 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 1,311 பேர் சிகிச்சைக்கு குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 74 ஆயிரத்து 306 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 17 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-

அரியலூர் – 2
செங்கல்பட்டு – 69
சென்னை – 307
கோவை – 115
கடலூர் – 13
தர்மபுரி – 11
திண்டுக்கல் – 31
ஈரோடு – 44
கள்ளக்குறிச்சி – 2
காஞ்சிபுரம் – 40
கன்னியாகுமரி – 26
கரூர் – 8
கிருஷ்ணகிரி – 28
மதுரை – 50
நாகை – 17
நாமக்கல் – 23
நீலகிரி – 19
பெரம்பலூர் – 0
புதுக்கோட்டை – 10
ராமநாதபுரம் – 4
ராணிப்பேட்டை – 12
சேலம் – 73
சிவகங்கை – 8
தென்காசி – 7
தஞ்சாவூர் – 25
தேனி – 12
திருப்பத்தூர் – 5
திருவள்ளூர் – 70
திருவண்ணாமலை – 40
திருவாரூர் – 9
தூத்துக்குடி – 9
திருநெல்வேலி – 15
திருப்பூர் – 48
திருச்சி – 28
வேலூர் – 20
விழுப்புரம் – 15
விருதுநகர் – 19

உள்நாட்டுவிமான நிலையம் கண்காணிப்பு- 1

மொத்தம் – 1,235

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.