கடையம் அருகே மின்சார வேலியில் சிக்கி யானை பலி
1 min read
Elephant killed by electric fence near Kadayam
11/12/2020
கடையம் அருகே மின்சார வேலியில் சிக்கி யானை இறந்தது.
மின்சார வேலி
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகம் ஆம்பூர் பீட் பகுதியில் செல்லக்குட்டி என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது.
வயலில் நெல் பயிரிட்டுள்ள செல்லக்குட்டி வனவிலங்குகளின் தொந்தரவை கட்டுப்படுத்துவதற்காக தோட்டத்தைச் சுற்றிலும் அனுமதி ஏதும் வாங்காமல் மின்சாரவேலி அமைத்துள்ளார்.
நேற்று இரவு அந்த பகுதிக்கு வந்த பெண் காட்டு யானை மின் வேலியைத் தாண்ட முயன்றது. அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை, காவல் துறை, மின்வாரியம் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மின்சார வேலியில் சிக்கி இறந்த யானைக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினார்கள் . களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் இரண்டு மாதங்களில் ஒரு சிறுத்தை மற்றும் 2 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.