களக்காடு அருகே மனைவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தொழிலாளி தற்கொலை
1 min read
Worker commits suicide at wife’s baby shower near Kalakkad
13/12/2020
களக்காடு அருகே மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வளைகாப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பிச்சை மகன் ஆறுமுகம் (வயது 23). கூலி தொழிலாளியான இவர் தனது மனைவியுடன் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகரில் வசித்து வந்தார்.
ஆறுமுகத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு ஆறுமுகம் மது அருந்தி விட்டு போதையில் வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
மதுபோதையில் வந்த அவரை உறவினர்கள் கண்டித்தனர்.
இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஆறுமுகம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவி வளைகாப்பு விழாவில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.