திருவண்ணாமலை கோவிலில் தரிசனக் கட்டணம் அதிகரிப்பு
1 min read
Increase in darshan fee at Thiruvannamalai temple
14/12/2020
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தரிசனக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
திருவண்ணாமலைக் கோவில்
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலும் ஒன்று. இந்தக் கோவில் சிவபெருமானின் அக்னித் தலமாக போற்றப்படுகிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்தக் கோவிலில் இலவச தரிசனம் உண்டு. இதுதவிர சிறப்பு தரிசனம் செய்யலாம். சிறப்பு தரிசனத்திற்கு ரூ.20 டிக்கெட் மற்றும் ரூ.50- டிக்கெட் உண்டு.
கொரோனா ஊரடங்க காரணமாக எல்லாக் கோவில்களையும் போல திருவண்ணாமலை கோவிலுக்கும் பக்தர்களை அனுமதிக்கவில்லை. கடந்தசெப்டம்பர் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பக்தர்கள் வரிசையாக சென்று சாமி மற்றம் அம்மன் சன்னதிகளில் மட்டுமே தரிசனம் செய்யலாம். உள்பிரகாரங்களில் தரிசனத்துக்கு அனுமதியில்லை.
கட்டணம் உயர்வு
பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்ந்து திடீரென கட்டண தரிசன டிக்கெட்டை ரூ.50 ஆக உயர்த்தியுள்ளனர்.
இந்த அமைப்பினர் கோவில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வணே்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கட்டண தரிசனத்தை கூட்டியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.