June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லி, கர்நாடகா, ஆந்திராவில் கொரோனா நிலவரம்

1 min read

Corona situation in Delhi, Karnataka, Andhra

16/12/2020

டெல்லி, மராட்டியம், ஆந்திாவில் கொரோனா பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

டெல்லி

இந்தியாவில் கொரோனா குறைந்து வருகிறது. இதில் டெல்லியில் கொரோனா பரவல் பற்றி டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

டெல்லி மாநிலத்தில் இன்று(புதன் கிழமை) 1,547 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,11,994 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று 32 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 10,147 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 2,734 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,88,586 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரியிகளில் 13,261 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தகவல்களை டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

கர்நாடகம்

கார்நாடக மாநிலத்தில் இன்று 1,240 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,04,665 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,971 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,403 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,77,199 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 15,476 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆந்திரா

ஆந்திர மாநிலத்தில் இன்று 478 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,76,814 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் இன்று 3 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 7,067 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 715 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,65,327 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 4,420 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.