சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவி ஏற்பு
1 min read
Sanjib Banerjee has been appointed as the Chief Justice of the Chennai High Court
4.1.2021
சென்னை ஐகோர்ட்டின் 50-&வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்ஜிப் பானர்ஜி இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த பதவி ஏற்பு விழா நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், தமிழக அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.