July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கோவில் பணியாளர்களுக்கு ரூ-.1000 பொங்கல் பரிசு

1 min read

Rs.1000 Pongal gift for temple staff

7.1.2021

கோவில் பணியாளர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவில் பணியாளர்கள்

திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000 வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.

2019-&2020-ம் ஆண்டு 240 நாட்களும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.1,000-மும், 6 மாதத்திற்கு மேல் 240 நாட்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.