இந்தியாவல் ஒரே நாளில் 16,311 பேருக்கு கொரோனா
1 min read
Corona to 16,311 people in a single day in India
11.1.2021
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,311 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை இன்று( திங்கட்கிழமை) காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 16,311 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 ஒரு கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 595 ஆக உயர்ந்தது.
இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 161 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்ந்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 160 ஆக உய்ந்துள்ளது.
நேற்று மட்டும் கொரோனாவில் இருந்து 19,299 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 92 ஆயிரத்து 909 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 526 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.