July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்

1 min read

10th and 12th grade students came to school excitedly

19.1.2021

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடம் வந்தனர்.

பள்ளிக்கூடம்

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25&ந் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கூடம், கல்லூரிகள் முடப்பட்டன.
அதன்பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டாலும் தமிழகத்தில் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் பொதுத் தேர்வை சந்திக்க இருக்கும் 10 மற்றும் 12&ம் வகுப்புகள் மட்டும் இன்று ( 19ந் தேதி) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் கருத்தைக் கேட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) 10, 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி அளிக்கப்பட்டது.

சமூக இடைவெளியை கடைபிடிக்க 6 அடி இடைவெளியில் வட்டம் வரையப்பட்டுள்ளது. நண்பர்கள், ஆசிரியர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட வாரியாக குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.