“தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துங்கள்”; -நீதிபதிகள் அறிவுறுத்தல்
1 min read
“Implement a ban on alcohol in Tamil Nadu”; -Judges instruction
16.2.2021
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுவிலக்கு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான வழக்கை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:&
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் விதமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கியுள்ளது.
பள்ளிக்கூடம், குடியிருப்பு அருகே வைப்பதற்கு டாஸ்மாக் ஒன்றும் புத்தகக்கடையோ, மளிகைகடையோ இல்லை. மாநில ஆறுகளில் நீர் ஓடுகிறதோ இல்லையோ, மதுபானம் ஆறாக ஓடுகிறது. பூரண மதுவிலக்கை, ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
==