June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

அப்துல் கலாமின் அண்ணன் அப்துல் மீரான் மரைக்காயர் மரணம்

1 min read

Abdul Kalam’s brother Abdul Meeran Maraikkayar dies

7.3.2021
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அண்ணன் அப்துல் மீரான் மரைக்காயர் மரணம் அடைந்தார்.

அப்துல்கலாம்

ராமேசுவரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல்காலம் நாட்டின் 11-வது ஜனாதிபதியாக கடந்த 2002-ம் ஆண்டு பதவி ஏற்றார். அவர் தனது பதவி காலம் முடிந்த பின்னர் பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று பேசி வந்தார். மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்து, இறந்தார். அவரது உடல் அவருடைய சொந்த ஊரான, ராமேசுவரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பேய்க்கரும்பு என்ற இடத்தில் அப்துல்கலாமின் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது.

அண்ணன் மரணம்

இந்த நிலையில் அப்துல் கலாமின் மூத்த அண்ணன் அப்துல் மீரான் மரைக்காயர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது104.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.