June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை- இலவச எரிவாயு ; தி.மு.க. வாக்குறுதிக்கு அ.தி.மு.க. பதிலடி

1 min read

Rs.1500 / – per month for family heads & free gas; DMK AIADMK to promise. Retaliation

8.3.2021
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1500 உதவித்தொகையும் குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயும் வழங்கப்படும் என்ற – முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதில் முக்கியமானதாக குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. வாக்குறுதி அளித்துள்ளது. அதாவது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1500ம் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 இலவசமாக சமையல் எரிவாயு -சிலிண்டரும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கசிந்தது

அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்து விட்டது. ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். சிறப்பான திட்டங்களால் நாங்கள் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம். அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள், மீண்டும் இணைய விரும்பினால் தலைமை முடிவு செய்யும்.
கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஏற்கனவே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மக்கள் மனம் மகிழும் வகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது. விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.