நடிகர் செந்தில் அமமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்
1 min read
Actor Senthil left Aam Aadmi Party and joined BJP
11.3.2021
தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்
நடிகர் செந்தில்
நடிகர் செந்தில் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2019ம் ஆண்டு செந்தில் தன்னை அமமுகவில் இணைத்துக்கொண்டார். அங்கு, அவருக்கு கட்சி அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆனாலும் அவர் கட்சி பணிகளில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியிருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கி, டிசம்பர் 2020-ல், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், செந்தில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், பாஜகவில் இனைந்தார்.
பேட்டி
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1988-ல் இருந்து அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா இருந்தவரை அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்தேன். இப்போது எந்த கட்சிக்கு போவது என தெரியாத நிலை இருந்தது. ஒரு நல்ல கட்சிக்கு செல்ல வேண்டும் என விரும்பினேன். பாரதீய ஜதனா தான் நல்ல கட்சி, எல்லோருக்கும் என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவையெல்லாம் கிடைக்கும் என எண்ணி, பாஜகவில் சேர நினைத்தேன். அதனால், பாஜகவில் இணைந்துவிட்டேன்.
இன்னும் பலர் பாரதீய ஜனதாவில் இணைவார்கள். பாரதீய ஜனதா தான் இனி வளரும். வேறு எந்த கட்சியையும் இனி யாரும் நம்ப மாட்டார்கள். நாட்டு மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை பாஜக செய்யும். ஊழல் செய்பவர்களை தட்டிக் கேட்பார்கள். ஊழலற்ற ஆட்சியாக பாஜகஇருக்கிறது. கண்டிப்பாக இந்த கட்சி காலூன்றும்.
அதிமுகவுக்காக சேவல் சின்னத்தில் பேசும்போதெல்லாம் யாரும் இல்லை.எனக்கு ஏதோ பிடிக்கவில்லை, அதனால் அதிமுகவிலிருந்து ஒதுங்கிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.