June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கருணாநிதி சமாதியில் தேர்தல் அறிக்கையை வைத்து வணங்கிய மு.க.ஸ்டாலின்

1 min read

MK Stalin worshiping at Karunanidhi’s tomb with election manifesto

13.3.2021

தி.மு.க. தேர்தல் அறிக்கையை அண்ணா மற்றும் கருணாநிதியின் சமாதியில் வைத்து மு.க.ஸ்டாலின் வணங்கினார்.

தேர்தல் அறிக்கை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் வைத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.