காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தென்காசி- பழனிநாடார்; வசந்தகுமார் மகனுக்கு சீட்
1 min read
Congress candidate list release; Tenkasi- Palani Nadar; Seat for Vasanthakumar’s son
13.3.2021
காங்கிரஸ் கட்சி 21 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தென்காசி தொகுதி பழனிநாடாருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் வசந்த குமார் மகன் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூ-ட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இன்று இரவு 21 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சியின் இணை செயலாளரும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான முகல்வாசினிக் அறிவித்தார். வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:&
- பொன்னேரி (தனி) – துரை சந்திரசேகர்
- ஸ்ரீபெரும்புதூர்( தனி) – கே.ஏ.செல்வபெருந்தகை
- சோழிங்கர்- ஏ.எம்.முனிரத்தினம்
- ஊத்தங்கரை (தனி) -ஜெ.எஸ்.ஆறுமுகம்க
- கள்ளக்குறிச்சி (தனி)- கே.ஐ.மணிரத்தினம்
6.ஓமலூர்- ஆர்.மோகன் குமாராமங்கலம்- - ஈரோடு கிழக்கு- திருமகன் ஈவேரா
- ஊட்டி – ஆர்.கணேஷ்
9.கோவை தெற்கு – மயூரா எஸ்.ஜெயக்குமார் - உடுமலைப்பேட்டை – கே.தென்னரசு
11.விருத்தாச்சலம் – எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் - அறந்தாங்கி- எஸ்.டி.ராமச்சந்திரன்
- காரைக்குடி- எஸ்.மாங்குடி
- மேலூர்- டி ரவிச்சந்திரன்
15.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – டி.எஸ்.டபிள்யூ மாதவராவ்
16 சிவகாசி – ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன்
- திருவாடானை- ஆர்.எம். கரு.மாணிக்கம்
- ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி எஸ். அமிர்தராஜ்
- தென்காசி-எஸ்.பழனிநாடார்
- நாங்குநேரி- ரூ-பி.ஆர். மனோகரன்
- கிள்ளியூர்- எஸ்.ராஜேஸ்குமார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் மறைந்த எம்.பி.யான எஸ்.வசந்தகுமாரின் மகன் வி.விஜயகுமார் என்ற விஜய்வசந்த் போட்டியிடுவார் என்ற அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியில் சிலருக்கு சீட் கொடுக்க கூடாது என்று சென்னையில் கட்சியின் அலுவலத்தில் நேற்று தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் காரணமாக 4 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.