July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

1 min read

There is no shortage of vaccines in Tamil Nadu; Interview with Minister Vijayabaskar

21.4.2021
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தட்டுப்பாடு இல்லை

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை. கொரோனா தடுப்பூசி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடுப்பு மருந்து வீணாகாமல் தடுப்பூசியை கையாள சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். வீணாகும் தடுப்பூசியின் அளவை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆக்ஸிஜன் பற்றக்குறை இல்லை. அங்கு 240 டன் ஆக்சிஜன் கையாளப்படுகிறது. முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. புனேவிலிருந்து வந்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.