தமிழகத்தில் இன்று 15,684 பேருக்கு கொரோனா ; 94 பேர் பலி
1 min read
Corona for 15,684 people in Tamil Nadu today; 94 people were killed
26/4/2021
தமிழகத்தில் இன்று 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 94 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு 10,97,672 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 13,625 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 9,76,876 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
94 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 94 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,651 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 4,250 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 3,14,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,21,26,656 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,20,184 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 1,07,145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 6,62,772 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 9,605 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,34,862 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 6,079 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநங்கைகள்
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.
மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.