July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா்; 293 பேர் சாவு

1 min read

Corona for 30,355 people in a single day in Tamil Nadu; 293 deaths

12/5/2021 –
தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 293 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று புதிதாக 30,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்்கை 14,68,864-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 293 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 19,508 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனவில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,79,658-ஆக உயர்ந்துள்ளது.

மேற்கண்ட தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.