கேரளாவில் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
1 min read
Black fungal infection in 7 people in Kerala
16.5.2021-
கேரளாவில் 3 தமிழர்கள் உள்பட 7 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை
மியூகோமைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று இந்தியாவின் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் உள்ள பூஞ்சை துகள்களால் ஏற்படும் இந்த நோய், புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பால் நாடு மிகவும் அபாயகரமான சூழலில் இருக்கும் நிலையில், இந்த கருப்பு பூஞ்சை தொற்றும் பரவி வருகிறது.
7 பேருக்கு தொற்று
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 7 பேருக்கு, இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 7 பேரில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கக் கூடியது எனக் கூறப்படுகிறது. இந்த நோயால், மராட்டிய மாநிலத்தில் 50 க்கும் மேற்பட்டோரும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.