இந்தியாவில் உள்ள டாக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
1 min read
Prime Minister Modi consults with doctors in India
- 5.2021
கொரோனா சூழலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள டாக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் ஆலோசனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை உலக நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று பற்றி மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோருடன் தொடர்ந்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா சூழலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் அடங்கிய குழுவினருடன் காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து டாக்டர்கள் கலந்து கொண்டனர். கொரோனா காலகட்டத்தில் டாக்டர்கள் கற்றறிந்த விசயங்கள் மற்றும் ஆலோசனைகளை அவர் கேட்டு கொண்டார்.