இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா; ஒரு நாளில் 1,32,788 பேருக்கு தொற்று
1 min read
Declining corona in India; 1,32,788 people were infected in one day
2/56/2021
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. நேற்று 1,32,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று புதிதாக 1,32,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,83,07,832 ஆக அதிகரித்துள்ளது.
3,207 பேர் சாவு
நேற்று 3,207 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,35,102 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் ஒரு நாளில் 2,31,456 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,61,79,085 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 17,93,645 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.