பறிமுதல் செய்த மதுபாட்டில்களை விற்ற 4 போலீசார் சஸ்பெண்டு
1 min read
4 policemen suspended for selling confiscated liquor
8.6.2021
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததாக சில தினங்களுக்கு முன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 434 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் திருச்சிற்றம்பலம் சரக காவல்நிலையத்தில் அந்நிய நபர்களுக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் சி.சி.டி.வி. கேமரா உதவியோடு, இந்த புகார் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.