தடுப்பூசியை வீணடித்ததில் ஜார்க்கண்ட் முதலிடம் ; கேரளா, மே.வங்காளம் முழுமையாக பயன்படுத்தின
1 min read
Jharkhand tops in vaccine wastage; Kerala and West Bengal made full use of it
10/6/2021
தடுப்பூசி மருந்தை வீணடித்ததில் ஜார்கண்ட் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் கேரளாவும் மேற்கு வங்காளமும் முழுமையாக தடுப்பூசியை பயன்படுத்தின.
தடுப்பூசி
இந்தியாவில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே ஒரு தீர்வு. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி திட்டம் தொய்வடைந்து உள்ளது.
இந்த நிலையில், மாநில அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் வீணடிக்கப்பட்ட அளவு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் படி, கடந்த மே மாதத்தில் கேரளாவும், மேற்கு வங்கமும் தடுப்பூசி மருந்துகளை வீணடிக்காமல், முழுவதுமாக பயன்படுத்தி உள்ளன.
கேரளா 1.10 லட்சமும், மேற்கு வங்காளம் 1.61 லட்சம் தடுப்பூசிகளை முழுவதும் பயன்படுத்தி, சுகாதாரத் துறையின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
ஜார்கண்ட்
ஆனால், நாட்டிலேயே ஜார்க்கண்ட் மாநிலம் 33.95 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகளை வீணடித்து, தடுப்பூசி மருந்து வீணடிப்பதில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து, சத்தீஸ்கர் 15.79 சதவீதமும், மத்தியப் பிரதேசம் 7.35 சதவீத மருந்தையும் வீணடித்திருப்பது தெரியவந்து உள்ளது.