கடையத்தில் 181 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது
1 min read
Gold was given to 181 women in the store
14–6-2021
கடையத்தில் 181 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்
வழங்கப்பட்டது.
தாலிக்கு தங்கம்
தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு உத்தரவுபடி 2018-19ம் ஆண்டுக்கான
தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கடையம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகையா, மாணிக்கவாசகம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதில் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. மொத்தம் 181 பெண்களுக்கு தங்கம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மாயவநாதன், சமூகநலத்துறை அலுவலர்கள் வசந்தி கலைச்செல்வி, ஐயம்மாள், லட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.