உருமாறிய கொரோனா வகைகளையும் எதிர்க்கும் 2டிஜி பவுடர் மருந்து
1 min read
2DG powder drug that also fights deformed corona types
17.6.2021
இந்தியாவில் கண்டறியப்பட்ட பவுடர் வடிவிலான கொரோனா மருந்தான ‛2-டிஜி’, அனைத்து உருமாறிய வகை கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன்மிக்கதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு பவுடர் மருந்து
ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ உருவாக்கிய கொரோனாவிற்கான மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த மாதம் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது. பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கலாம் எனவும், இதனால் கொரோனா நோயாளிகள் மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருப்பதை குறைக்க முடிவதாகவும், நோயாளிகள் விரைவில் குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உருமாறிய கொரோனா
இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக இந்த 2-டிஜி மருந்து செயல் திறன் மிக்கதா என அன்னத் நாராயண் பட், அபிஷேக் குமார், யோகேஷ் ராய், திவியா வேதகிரி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். அதில், இந்த 2-டிஜி மருந்து, கொரோனாவின் அனைத்து வகை உருமாறிய வகைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் இந்த ஆய்வு இன்னும் மறுஆய்வு செய்யப்படவில்லை என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.