கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அனஸ்தீசியா மருந்த எடுக்கலாமா?
1 min read
Can people with corona vaccine take anesthesia?
17.6.2021
கொரோனா தடுப்பூசி போட்டவர்கன் அனஸ்தீசியா மருந்து எடுத்துக்கொள்ளலா என்பது வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
கொரோனா தடுப்பூசி
கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாக செய்ய வேண்டியது தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் என அரசாங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இதனால் ஏராளமானோர் தடுப்பூசிப்போட தயங்கினார்கள். ஆனால் இப்போது அந்த அச்சம் இல்லை என்னாலும் தடுப்பூசிபற்றி பல்வேறு வதந்திகள் வரத்தான் செய்கின்றன.
அனஸ்தீசியா
இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் அனஸ்தீசியா பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்களின் உயருக்கே ஆபத்தாகிவிடும் என கூறும் பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அனஸ்தீசியா சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ள மேலும் ஒருமாத காலம் காத்திருக்க வேண்டும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
நிரூபிக்கப்படவில்லை
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இதுபோன்ற தகவல் அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், தடுப்பூசியின் இரு டோஸ் பலன்களை முழுமையாக பெற அதனை எடுத்துக் கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதை பரிந்துரைப்பதில்லை.
தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை அனஸ்தீசியா தேவைப்படும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என இதுவரை அறிவுறுத்துவில்லை. அந்த வகையில் வைரல் தகவல் இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.