இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்வு; 67,208 பேருக்கு கொரோனா; 2,330 பேர் சாவு
1 min read
Slight increase in corona impact in India; Corona to 67,208; 2,330 deaths
17/6/2021-
இந்தியாவில் ஒரு நாளில் 67 ஆயிரத்து 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேர் இறந்துள்ளனர்.
கொரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போது குறைந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி முதல் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.
அதன்படி, இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 67 ஆயிரத்து 208 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று காலை 62,224 பேருக்குத்தான் கொரோனா பதிவாகி இருந்தது. இன்று சற்று அதிகரித்துள்ளது.
இதுவரை நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 313 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 8 லட்சத்து 26 ஆயிரத்து 740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2,330 பேர் சாவு
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 570 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 84 லட்சத்து 91 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 330 பேர் உயிரழ்ந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடியே 55 லட்சத்து 19 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 38 கோடியே 52 லட்சத்து 38 ஆயிரத்து 220 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரேநாளில் 19 லட்சத்து 31 ஆயிரத்து 249 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.