திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை
1 min read
Rs 1 crore donation to Tirupati Ezhumalayan temple
19.6.2021
தனியார் நிறுவன உரிமையாளரும், பக்தருமான டி.உபேந்திராரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினார்.
ரூ.1 கோடி காணிக்கை
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அனப்பர்த்தி பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவன உரிமையாளரும், பக்தருமான டி.உபேந்திராரெட்டி என்பவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாதான அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலையாக ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினார்.
அந்தக் காணிக்கையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்டார். அந்தப் பக்தருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.