இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு கொரோனா; 1,005 பேர் பலி
1 min read
Corona for another 48,786 people in India; 1,005 people killed
1/7/2021
இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு கொரேனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் ஒரே நாளில் 1,005 பேர் பலினார்கள்.
கொரோனா
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் 48,786 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 04 லட்சத்து 11 ஆயிரமாக பதிவானது.
ஒரே நாளில் 61,588 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியது.
தற்போது 5.23 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1,005 பேர் பலி
கொரோனாவுக்கு நாடுமுழுவதும் நேற்று 1,005 பேர் பலியானதை அடுத்து, இதுவரை 3,99,459 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.97 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.31 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.72 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் நேற்று (ஜூன் 30) ஒரே நாளில் 19,21,450 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 41 கோடியே 20 லட்சத்து 21 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
உலக பாதிப்பு
இன்று (ஜூலை 1-ம் தேதி) காலை 10.15 மணி நிலவரப்படி உலகில் கொரோனா தொற்றால் 18 கோடியே 29 லட்சத்து 81 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 லட்சத்து 62 ஆயிரத்து 879 பேர் பலியாகினர். 16 கோடியே 75 லட்சத்து 65 ஆயிரத்து 591 பேர் மீண்டனர்.