12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊசி இல்லா; தடுப்பூசிஅனுமதி கோரி மனு
1 min read
No injection for those over 12; Petition seeking permission for vaccination
1/7/2021
12 வயது முதல் 18 வயது உடையோருக்கு செலுத்த ஊசியில்லா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜைகோவ்-டி தடுப்பூசி
பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம், 12 – 18 வயதுடையவர்களுக்கு செலுத்தக் கூடிய ஜைகோவ்-டி என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், இதை அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ) இந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் 5வது தடுப்பூசி!
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசுக்கு எதிராக 4 தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதியளித்து உள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஜைடஸ் கெடிலாவுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 5வது தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெருமையும், முதல் டி.என்.ஐ., வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்கு கிடைக்கும்.
ஊசியில்லா தடுப்பூசி
ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28வது நாளில் 2வது டோசும், 56வது நாளில் 3வது டோஸ் செலுத்த வேண்டும். ‘நீடில்லெஸ்’ தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் இது செலுத்தப்படும். இந்த தடுப்பூசி, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் கீழ்வரும், உயிர்தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.