தமிழகத்தில் இன்று 2,458 பேருக்குக் கொரோனா; 55 பேர் சாவு
1 min read
Corona for 2,458 people in Tamil Nadu today; 55 deaths
14/7/2021
தமிழகத்தில் இன்று 2,458 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,26,401. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,35,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,62,244.
சென்னையில் 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். .
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
- தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 30,600.
- மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 25,26,401.
- இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,305.
- சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 153.
- சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 1629.
- மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,76,288 பேர். பெண்கள் 10,50,075 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
- தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,428 பேர். பெண்கள் 1,030 பேர்.
- இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,021 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 24,62,244 பேர்.
55 பேர் சாவு
- இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 55 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33,557 ஆக உள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 35 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 20 பேர்.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.