இந்தியாவில் 38,792 பேருக்கு கொரோனா; 624 பேர் சாவு
1 min read
Corona for 38,792 people in India; 624 deaths
14.7.2021
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கடந்த 118 நாட்களில் இல்லாத அளவு 38,792 ஆக குறைந்துள்ளது. 624 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர எண்ணிக்கை 3 கோடியே,09 ஆயிரத்து,46 ஆயிரத்து074 ஆகும்.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,792.
ஒரேநாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41,000 ஆகும். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,04,720
நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 624 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 4,11,408 ஆக உணர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,29,946. ஆகும்.
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 38,76,97,935
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.