காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்
1 min read
Prime Minister Modi praises Kamaraj
15.7.2021
தேச வளர்ச்சி, கல்வி, சமூகத்தை வலிமையடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
காமராஜர் பிறந்தநாள்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசு கடைபிடிக்கப்படுகிறது.
இதையட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடியும் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தேச வளர்ச்சி மற்றும் சமூகத்தை வலிமையடைய செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் வலியுறுத்திய கல்வி, சுகாதாரம் பெண்ணுரிமை ஆகியவை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.